Total Pageviews

Sunday, February 7, 2016

கந்தர் அலங்காரம் 75 , 79 , 90






படிக்கின் றிலைபழ நித்திரு நாமம் படிப்பவர்தாள்
   
முடிக்கின் றிலைமுரு காவென் கிலைமுசி யாமலிட்டு
      
மிடிக்கின் றிலைபர மாநந்த மேற்கொள விம்மிவிம்மி
         
நடிக்கின் றிலைநெஞ்ச மேதஞ்ச மேது நமக்கினியே.   ...     75 



சுய இரக்கம் என்பது மனிதர்களின் இயல்பு களிவிரக்கம் கொண்டு தங்களைத்தாங்களே தேற்றிக்கொள்வது துன்பத்தை தாங்கிக்கொள்ள ஒரு வழி ஆறுதல் ஆசுவாசம்  .இன்றைய கானா பாடல்கள் மனிதர்களால் பெரிதும் ரசிக்கப்படுவது களிவிரக்கத்தாலேயே . ஆனால் தங்களைத்தாங்களே நியாயப்படுத்திக்கொண்டு திருந்தாமலும் முன்னேறாமலும் தேக்கத்தை கொடுக்கும் ஆபத்து இந்த கானா பாடல்களில் நிறைய உள்ளது

அந்த களிவிரக்கத்தையும் ஞானம் புகட்டிக்கொள்ள அருணகிரியார் பயன்படுத்தி தனக்குத்தானே புலம்பிக்கொள்கிறார் .

பழநிவேலுச்சாமியின் திருநாமங்களை படிக்க மாட்டேங்கிறாயே முருகா கந்தா கடம்பா கார்மயில் வேலா என மனதார வாயார அழைக்க உனக்கு மனம் வரமாட்டேங்கிறதே

சரி அதுதான் போகட்டும் அப்படி அழைக்கும் பக்தர்களின் கூட்டத்தோடு அவ்வப்போது கலக்கலாமே அதுவுமில்லை பக்தயோகிகளான குருமார்களை கண்டறிந்து அவர்களின் உபதேசத்தை கேட்டு அவ்வழி நடக்கிறாயா அதுவுமில்லை

அவர்களின் உபதேசத்தை கிண்டலடிக்காமல் அப்படியே உள்வாங்கி மனதிற்குள் பூட்டியாவது வைக்கிறாயா அதுவுமில்லை

இறைவனின் தெய்வீக பேரன்பை வேண்டி அவரிடம் கண்ணீர் விட்டு அழுது நடித்தால்கூட போதுமே ; உண்மையான பக்தி உள்ளே விளையாவிட்டாலும் கூட ; தனக்குத்தானே களிவிரக்கம் கொண்டு கண்ணீர் விட்டு ஆசுவசப்படும் மனிதனே அதே கண்ணீரை இறைவா என் மீது அன்பு காட்டுவாயா என கேட்டால் போதுமே அதையும் செய்யமட்டேங்கிறாயே

நெஞ்சமே உனக்கு தஞ்சம் வேறு எங்குதான் கிடைக்கும்

பந்தாடு மங்கையர் செங்கயற் பார்வையிற் பட்டுழலுஞ்
   
சிந்தா குலந்தனைத் தீர்த்தருள் வாய்செய்ய வேல்முருகா
      
கொந்தார் கடம்பு புடைசூழ் திருத்தணிக் குன்றினிற்குங்
         
கந்தா இளங்கும ராஅம ராவதி காவலனே.   ...     79 .


தலுக்கு குலுக்கு மினுக்கு என்பது இயல்பாகவே பெண்களின் சரீரத்தோடு சம்மந்தப்பட்டது . அவர்கள் அவர்கள் பாட்டுக்கு எதையோ செய்வார்கள் ஆனால் அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதுபோல காமம் கடராத ஆண்களுக்கு பெண்கள் அசைவெல்லாம் தன்னை கவர்வதற்கு என்பதுபோல பந்தாடுமாம் . அதிலும் காமக்கிழத்தி தொழில் செய்வோரோ தங்கள் அலட்டல் மூலமாக வாடிக்கையாளர்களை கவர்ந்திழுத்து கண்ணசைவால் கட்டிபோட்டிருப்பார்களாம்  


அப்படி பந்தாடும் மங்கையர்களின் கண்ணசைவிலிருந்து தப்ப முடியாமல் கட்டுண்டு கிடக்கும் ஆண்பெண் பேதத்தை தீர்த்து வைக்க உன்னால்மட்டுமே முடியும் வெற்றி வேலனே

தெய்வீக நறுமணம் வீசும் கடம்ப மாலையை வெற்றி மாலையாக அணிபவன் நீயல்லவா ?

சகல பேதங்களையும் தனித்து அடக்கும் திருத்தணிகை நீ நிற்கும் குன்றே ஆகும் . அதனால் கொத்து கொத்தாக கடம்பம் அங்கு பூத்து குலுங்கி வெற்றியை பறைசாற்றுகிறது . அப்படிப்பட்ட உன்னால் மட்டுமே ஆண்பெண் பேதத்தை அடக்கி தெய்வீக பேரன்பை மலரச்செய்ய முடியும்

மாலோன் மருகனை மன்றாடி மைந்தனை வானவர்க்கு
   
மேலான தேவனை மெய்ஞ்ஞான தெய்வத்தை மேதினியிற்
      
சேலார் வயற்பொழிற் செங்கோடனைச்சென்று கண்டுதொழ
         
நாலா யிரங்கண் படைத்தில னேயந்த நான்முகனே.   ...     90 


நீ மாலோனின் மருகன் . வெற்று வெளியில் எதுவெல்லாம் வெளிப்பட்டவையோ அந்த பிரபஞ்சம் அனைத்திற்கும் எல்லை ; மாலானவன் நாராயணன் . அந்த அதிதேவன் பூமிக்கு அவதாரமாக மருகி வருகிறவனாகிய முருகன் மாலோன் மருகன் ஆனால் பூமியில் சரீரத்தில் மனிதனாக வருவதால் சிவனின் மைந்தன் .

இந்த சிவன் இருக்கிறாரே அவரே சிறந்த பக்தன் . மனித சரீரத்தில் வந்ததால் ஆதியில் செய்த ஒரு தவறுக்காக மன்றாடி தவம் செய்தவர் . ஆகவே அவரே மன்றாடியார் .

மனித சரீரத்தில் வந்தால் மன்றாடி வேண்டாமல் தீய இயல்புகளிலிருந்து தப்பவே முடியாது . ஞானசற்குருவாக பூமிக்கு அவதரித்து யுகம் யுகமாக நாராயணன் வருவான் . அவனே தீமைகளிலிருந்து நம்மை தப்புவித்து காக்க வல்லவன் . அவன் கடவுளின் பிரதிநிதியாக பூமிக்கு வருவதால் அவனை தேவமைந்தன் ; ஸ்ரீராமன் ஜெரோம் ஜெயராம் என்றனர்

குரானிலும் மனிதர்களில் சிலரை கடவுள் துதராக பூமியில் தேர்ந்தெடுத்துக்கொள்வது போல மலக்கு அதாவது தேவர் என்ற நிலையிலிருந்தும் தூதரை அனுப்புகிறார் என குறிப்பு உள்ளது

22:75. அல்லாஹ் மலக்குகளிலிருந்தும், மனிதர்களிலிருந்தும் தூதர்களை தேர்ந்தெடுத்துக் கொள்கிறான்!  

இந்த மலக்கு துதர்களில் இயேசுவைத்தவிர்த்து பலர் இந்தியாவில் வந்தவர்களே அப்படி பலரை அறிந்த இந்தியர்கள் வெளிநாட்டில் வந்த இயேசுவை வெறுப்பதும் ஒரு மாயையே . தங்களிடம் வந்த இயேசுவை தூக்கி வைத்து ஆடுகிறவர்கள் அவரே இந்தியாவில் ராமராகவும் கிரிஷ்ணராகவும் வந்ததை உணராததும் மாயையே

இம்மூவரும் மனிதர்கள் அல்ல வானவர்களுக்கு மேலான அதிதேவரான நாராயணன் . வேதங்களின் அதிபதியான  காப்ரியேல் .

வேதத்தின் உட்பொருளான ஞானமோ அதன் அதிபதியான ஆதிசேஷனிடமிருந்து வருவது . பரலோகத்தில் தேவ சேனாதிபதியாக விளங்கும் முருகன் ஆதிசேஷனின் வியாபகமான செங்கோடன்

அவன் திருச்செங்கோட்டில் வீற்றிருக்கிறான் . அவனை கண்டு தொழுவதற்கு நாலாயிரம் கண் எனக்கு இல்லையே என புலம்புகிறார் அருணகிரியார்

நாராயணனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணனாய

ஆதிசேஷனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ ஆதிசேஷாய

நாராயணியாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணியாய

சிவனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ சிவாய

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி








No comments:

Post a Comment