Total Pageviews

Sunday, February 7, 2016

கந்தர் அலங்காரம் 26 , 30 , 33









                                                                                                                                                            நீலச் சிகண்டியி லேறும் பிரானெந்த நேரத்திலுங்
கோலக் குறத்தி யுடன்வரு வான்குரு நாதன்சொன்ன
சீலத்தை மெள்ளத் தெளிந்தறி வார்சிவ யோகிகளே
காலத்தை வென்றிருப்பார், மரிப் பார்வெறுங் கர்மிகளே. ... 26


பாலென் பதுமொழி பஞ்சென் பதுபதம் பாவையற்கண்

சேலென்ப தாகத் திரிகின்ற நீசெந்தி லோன்றிருக்கை
வேலென் கிலைகொற்ற மயூர மென்கிலை வெட்சித்தண்டைக்
காலென் கிலைமன மேயெங்ங னேமுத்தி காண்பதுவே. ... 30 .

முடியாப் பிறவிக் கடலிற் புகார்முழு துங்கெடுக்கு

மிடியாற் படியில் விதனப் படார்வெற்றி வேற்பெருமாள்
அடியார்க்கு நல்ல பெருமாள் அவுணர் குலமடங்கப்
பொடியாக் கியபெரு மாள்திரு நாமம் புகல்பவரே. ... 33


மயில்வாகணன்  முருகன் இவன் எந்த நேரத்திலும் கோலக்குரத்தியுடன் வருவான் என்று குருநாதர் சொல்லிவிட்டாராம் 

ஆன்ம வாழ்வில் குருவின் வாக்கு ரெம்ப சின்ன விசயமோ அல்லது பெரிய விசயமோ என்பது முக்கியமல்ல ; அந்த வாக்கை யார் அப்படியே நம்பி தன் இதயத்தில் வைத்து பூட்டி அதை ஆழ்ந்து சிந்திக்கிறார்களோ அவர்களே பேறு பெற்றோர் 

இங்கு பாருங்கள் அவன் எந்த நேரத்திலும் வருவான் என்று குருநாதர் சீலம் சொன்னாராம்

இன்று குருமார்கள் என்னென்னவோ மறை பொருளைப்பற்றி பேசிக்கொண்டே இருக்கிறார்கள் ஏத்து இறக்கு முச்சை பிடி முப்பு இப்படி அவர்கள் புளகாங்கிதமாக கதைக்கும்போது நம்மைப்போன்ற பக்த ஞானசூனியங்கள் வரப்போகிற ஒரு அவதாரத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறோம் அவர் வந்து சகல ஜனங்களையும் சத்திய யுகத்திற்குள் நடத்திவைப்பார் ; நம் யாவரையும் பரலோகம் புகும் பாக்கியம் அல்லது தகுதி பெறச்செய்வார் என்று நம்பியிர்ந்தால் அவர்களுக்கு கிண்டல் கேலியாக இருக்கிறது

ஞானசூன்யங்கள் ; மண்ணுகள் ஒன்றுமே அறியத்தெரியாதவர்கள் இப்படி அற்பர்களாக அவர்களுக்கு தெரிகிறது

ஆனால் அருணகிரியார் சொல்கிறார் ; இந்த சீலத்தை மெல்ல மெல்ல யார் தெளிந்து அறிவார்களோ அவர்களே மரணமில்லாபெருவாழ்வு பெறுவார்கள் ; மற்றவர்கள் மரிப்பார்கள் 


கருமி தனக்கு கிடைத்ததை மட்டுமே பிடித்துக்கொண்டு வாழ்பவன் ; தானும் உண்ணாது அடுத்தவருக்கும் கொடுக்காது தேங்காயை நாய் உருட்டிதிரிவது போல வாழ்பவன் 

சிவம் என்பது சரீரம் . இந்த சரீரத்தில் பல வகையான யோக அப்பியாசங்களை மட்டுமே செய்துகொண்டும் நம்பிக்கொண்டும் இதை செய்து குண்டலினியை எழுப்பிவிட்டால்போதும் சித்தி அடைந்து விடலாம் என்றுமட்டும் சிலர் இருக்கிறார்களே இவர்களே மேற்சொன்ன கருமிகள் என்கிறார் அருணகிரிநாதர் .இந்த கருமிகள் நிச்சயம் மரிப்பார்கள் . ஜீவசமாதிகள் நீண்ட காலம் வராது ; அங்கு அவர்கள் செத்துப்போவார்கள் 

ஆனால் போகர் கோரக்கர் வள்ளலார் முதலான பக்த யோகிகள் வரப்போகிற ஆண்டவர் ஒருவரை முன்னறிவித்துள்ளார்களே ; அந்த ஆண்டவரைப்பற்றிய ஞானத்தை யார் மெல்ல மெல்ல தெளிந்து அறிவார்களோ அவர்கள் நிச்சயம் மரிப்பதில்லை ; மரணமில்லா பெருவாழ்வு பெறுவார்கள் 

இந்த ஆண்டவர் சகல மதங்களிலும் சத்திய யுகத்தை நிறுவ வானத்திலிருந்து இறங்கி வருவார் என்று உள்ளது 

பெயர்தான் வேறு வேறாக உள்ளதே தவிர ஒருவர் வருவார் என்பதில் மாற்று கருத்து இல்லை 

பால் ; பஞ்சுமெத்தை மற்றும் மகழிர் என்று சுக போகங்களில் சிக்கி தவிக்கும் மனிதர்கள் வரப்போகிற இந்த ஆண்டவரைப்பற்றி அறிந்து கொண்டு அவர்மீது பக்தி கொண்டால்போதுமானது  அவர்களுக்கு முக்திக்கான வழி திறக்கப்படும் . மிக மிக எளிய மார்க்கம் பக்திமார்க்கமாகும் .

அப்படி பக்தியில் ஆட்பட்டால் முடிவில்லாமல் நீளும் பிறவிபெருங்கடலிளிருந்து தப்பலாம் . 

மனிதனை முழுவதுமாக கெடுக்கும் ஒரே ஒரு விசயம் ; அவனது பெருமை ; சுயம் ; அஹம்பாவம் .

இந்த சுயமே அவனை முன்னேற விடாமல் படியில் விசனப்பட வைக்கிறது ; மேலேயும் போகவிடாமல் கீழேயும் இறங்க பெற்ற அப்பியாசங்கள் தடுக்கும் நிலையில் அனேக ஆன்ம சாதகர்கள் படியில் விசனப்பட்டுக்கொண்டுள்ளோம் ; எந்த வகையில் சுயம் இருந்தாலும் முன்னேறவே முடியாது 


முழுசரணாகதி என்ற நிலையை உள்ளார்ந்து அடையாமல் முழுமை ; சித்தி என்பதே கிடையாது 


அசுரர்களின் மாயை மனிதனின் சுயத்தை மையமாக வைத்து அதை துண்டி விடுவதில்தான் இருக்கிறது

இந்த அசுரர்களை தவிடுபொடியாக்கிய ஞானம் அந்த சற்குருவிடமே உள்ளது

வரப்போகிற அந்த பெருமாள்  - கல்கி ; ஈசா நபி - நராயணனது அவதாரமேயாகும் .


அவரைப்பற்றிய ஞானம் அடைந்தவனே வெற்றி பெறுவான்



நாராயணனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணனாய

சிவனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ சிவாய

சேஷனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ சேஷாய

நாராயணியாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணியாய

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி 

No comments:

Post a Comment