Total Pageviews

Sunday, February 7, 2016

கந்தர் அலங்காரம் 38 , 40 , 47







நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
   
கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு
      
தாளுஞ் சிலம்புஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகமுந்
         
தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே.   ...     38 

சேல்பட் டழிந்தது செந்தூர் வயற்பொழில் தேங்கடம்பின்
   
மால்பட் டழிந்தது பூங்கொடி யார்மனம் மாமயிலோன்
      
வேல்பட் டழிந்தது வேலையுஞ் சூரனும் வெற்புமவன்
         
கால்பட் டழிந்ததிங் கென்றலை மேலயன் கையெழுத்தே.   ...     40 

பத்தித் திருமுக மாறுடன் பன்னிரு தோள்களுமாய்த்
   
தித்தித் திருக்கு மமுதுகண் டேன்செயன் மாண்டடங்கப்
      
புத்திக் கமலத் துருகிப் பெருகிப் புவனமெற்றித்
         
தத்திக் கரைபுர ளும்பர மாநந்த சாகரத்தே.   ...     47 

நாள் சரியில்லை நான் செய்த வினை என்னை விடாதுபோல தெரிகிறது கோள்கள் கோசாரம் எனக்கு சாதகமாக இல்லை .கொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு போனால் அங்கும் ரெண்டு கொடுமை திங்கு திங்குன்னு குதிக்கிதே வம்பா வருது சாமி

அப்படியே மூச்சை பிடித்துக்கொண்டு ஓடிக்கொண்டே இருக்கும் நிலையை நாம் கடந்திருப்போம்

ஆனால் சோதனைகளைப்பற்றி வேதங்கள் என்ன சொல்கின்றன ?


I கொரிந்தியர் 10:13 மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக,சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்.

கஷ்டமான காலங்களில் நாம் முக்கிக்கொண்டும் முனகிக்கொண்டும் கடந்து வந்தோமே அவைகள் மீண்டும் சம்பவித்தால் நம்மால் இப்போது தாங்கிக்கொள்ள பலம் உள்ளது என்று சொல்வீர்களா ?

நிச்சயமாக முடியாது . அவ்வளவு கஷ்டத்திலும் அதை தாங்கிக்கொள்ளும் உள்ளார்ந்த பலத்தை இறைவனே அனைவருக்கும் வழங்குகிறார்

நாம் அமைதியாக மன ஆறுதலுக்கு முடிந்தளவு கோவிலுக்கு சென்று சமயம் வாய்க்கும் அளவும் பிரார்த்தனை தியானம் செய்துகொண்டிருந்தாலே போதும் அல்லது விளக்கு போட்டுக்கொண்டிருந்தால் போதும்

கஷ்ட்டங்களை விட அவைகளைப்பற்றி நமக்கு நாமே அலட்டிக்கொள்வதுதான் அதிக உபத்திரவம் கொடுப்பது நமது மனம் இருக்கிறதே அது உயர்வாகவோ தாழ்வாகவோ எதையாவது அலட்டிகொண்டே இருக்கும்

சும்மாயிரு சும்மாயிரு – முருகன் அருணகிரிநாதருக்கு உபதேசித்த ஒரே ஒரு வார்த்தை

இன்றுவரு மோநாளைக் கேவருமோ அல்லதுமற் 

றென்றுவரு மோஅறியேன் எங்கோவே-துன்றுமல 


வெம்மாயை யற்று வெளிக்குள் வெளிகடந்து 


சும்மா இருக்கும் சுகம்.

வள்ளலாரின் ஞானப்புலம்பல் இவ்வரிகள்

சும்மாயிருக்கும் சுகம் . வெளிக்குள் வெளி கடந்து நாம் பரலோகத்தில் நுழைந்தால் அங்கு என்ன செய்வோமாம் ? சும்மாயிருப்போமாம்

நம்மிடம் துன்றும் துள்ளிக்குதிக்கும் கரைதிரைகள் மாயைகள் சுயம் என்ற உணர்வைத்துண்டி இறைவனுக்காக காத்திருப்பதற்கு பதிலாக எதையாவது செய்யவைத்து பூமியில் குழப்பம் விளைவிக்கிறது  

தேவர்கள் எவ்வளவு ஆற்றல் உள்ளவர்களாக இருந்தாலும் சுயமாக எதுவும் செய்யமாட்டார்கள் . இறைவன் கட்டளையை மட்டுமே நிறைவேற்றுவார்கள் மற்ற நேரங்களில் சும்மாவே இருப்பார்கள் அதனால்தான் பரலோகத்தில் குழப்பம் எதுவும் நேர்வதில்லை

நாமாக ஏதாவது செய்வதால்தான் பிரச்சினைகள் வருகின்றன . ஆனால் இறைவா என இறைஞ்சிக்கொண்டு இறைவனையே நம்பிக்கொண்டு இறைவனையே எதிர்பார்த்து சும்மா இருக்க கற்றுக்கொண்டால் இறைவன் சித்தம் எதுவோ அதை மட்டும் செய்யவும் நம்மை சுற்றிலும் இறை சித்தம் எதுவோ அதுமட்டுமே தானாக நடப்பதையும் பார்ப்போம்

கந்தரலங்காரத்தில் செயல் மாண்டு அடங்குதல் வேலையை ஒழித்தல் சும்மாயிருத்தல் என்ற வார்த்தைகளை அருணகிரியார் அடிக்கடி உச்சரித்துள்ளார்

இதை சரியாக புரிந்துகொள்வது கிருபையாலன்றி முடியாதது சோம்பேறித்தனத்தை கொண்டுவந்து விடும்

நம் மேல் சுமரும் கடமைகளை பிரார்த்தனை செய்துகொண்டே கிடைக்கும் வழியில் செய்து கொண்டே இருப்பது இறைவனைத்தான் நம்பி இருக்கிறேன் என மனதில் சொல்லிக்கொண்டே இருப்பது காரியம் நடந்ததும் அதைப்பற்றி மனதில் பெருமை பாராட்டாமல் இறைவனுக்கு நன்றி சொல்வது இப்படியே இறைவனிடம் வேண்டுவதால் அவர் காரியம் செய்வதாக செயல்படுவது . இது மனநிலை சார்ந்த விசயம் ஒரு யோகமும் கூட.

உலகிற்கு அவன் சும்மாயிருக்கும் போதும் மனத்தால் அவன் இறைவனிடம் பிரார்த்தனை என்ற செயல் செய்துகொண்டே இருப்பான்

உலகிற்கு அவன் செயல்படும்போதும் இறைவன் தன்னை அச்செயல் செய்யவைப்பதாக அவன் மனம் கருதிக்கொள்வதால் அவனைப்பொருத்து அவன் செயல்படாதவனாக இருக்கிறான் எந்த உணர்வும் வயப்படுவதில்லை படபடப்பதில்லை கொந்தளிப்பதில்லை முடிந்தளவு நேர்த்தியாக அக்காரியத்தை செய்துவிட்டு அதன் பலனை இறைவனுக்கு அர்ப்பனித்துவிடுகிறான்

கீதை 4:18 யார் தன் மீது சுமறும் எல்லா 

செயல்பாடுகளிலும் தன்னை ஈடுபடுத்தி கொண்டு 

வினையாற்றினாலும் செயலில் செயலை கடந்த 

மனநிலையும் செயல்படாத போதும் செயலை 

நிர்வகிக்கிற மனநிலையும் 

அடையப்பெறுகிறானோ 

அவனே அறிவுதிறமுடையவன்! நித்திய ஜீவனை 

அடைவதற்கான பரிபக்குவத்தில் பயனிக்கிறவன்!! 

செயலில் செயலின்மையையும் செயலின்மையிலும் செயலையும் காண்பவனே யோகி என்கிறது கீதை  

குழப்பங்களுக்கு காரணம் நமது சுய அலட்டலே . இறைவன் மீது பாரத்தைப்போட்டு இறைவனுக்காக காத்திருந்தால் குழப்பங்கள் வராது

இறைவனுக்காக காத்திருப்பது எவ்வாறு ?

கும ரேசரிரு
      
தாளுஞ் சிலம்புஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகமுந்
         
தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே

குமார் ராம் ரோம் முருகன் என்பதெல்லாம் அதிதேவர்  நாராயணன் பூமிக்கு மனிதனாக வரும் அவதாரம் ஆகும் . அவர் பூமியில் மனிதனாக வரும்போது ஈசனுக்கு பிள்ளை அதாவது குமரேசன் சிவக்குமார் மனுஷகுமாரன்  . இயேசு பூமியிலிருந்த போது தன்னை மனுஷகுமாரன் என்றே அழைத்தார்

பூமிக்கு அவதாரமாக வருகிற யாரும் முருகனே . அல்லது அவர்களின் அருள் பெற்ற இறைதூதர்கள் அருளாளர்கள் யார் மூலமாக நமக்கு இறைவனின் வழிகாட்டல்கள் வருகிறதோ அவர்களை அண்டிக்கொள்வது . அவர்களிடம் நம் இடறல்களை ஒப்புவிப்பதும் விடுதலையை கொடுக்கும்

நமக்கு ஆவிமண்டலத்தில் யார் குரு வழிகாட்டி என்பதை கண்டறிவது அவரின் தொடர்பில் பூமியில் நம் முன்னோடியான மனிதன் யார் என்பதை பிரார்த்தித்தால் இறைவனே காட்டித்தருவார்

சற்குருவாம் முருகனின் பாதங்களை சரணடைந்து அவரோடு ஐக்கியம் பூண்ட சிலம்புகலான மனிதர்களை கண்டறியவேண்டும் . அவர்களின் மூலமாக வரும் வழிகாட்டுதல்களே சதங்கை ஒலி . இந்த ஒலிகளோடு வழிகாட்டுதல்களோடு இயைந்து வாழப்பழகினால் அடுத்த படி நோக்கி உயர்வோம்

அப்போதே சண்மார்க்கங்களாக ஆறு மார்க்கங்களாக வெளிப்பட்டுள்ள இறைநடத்துதல் தத்துவங்கள் நமக்கு வெளிப்படும் அதன் சிறப்புகளான தண்டை அணிகலன்கள் தரிசிக்கப்படும் இறைவனோடு கட்டப்பட்ட கடம்ப வாசனை நம்மிடமும் பெருக்கெடுக்கும்

முருகனின் அம்சங்களான இறை அடியவர்களின் பார்வை பட்டால் பொக்குபாறை போன்ற மாயைகள் அழியும் . கிரவுஞ்ச மலை என்ற மாய மலையை உருவாக்கி அதில் சூரன் மறைந்துகொண்டு உலகை தாக்கிகொண்டுள்ளான் . அந்த மாயையை முருகனின் ஞானவேல் மட்டுமே உடைக்கமுடியும் . திருச்செந்தூரில் வள்ளி குகை என்பது பொக்குபாறையாக அடையாளமாக இருக்கும் செந்தில் செந்தூர் என்பது மாயமலையை குறிப்பது 

இறைதூதர்களின் வார்த்தைகள் என்ற ஞானமே செந்தூர் என்ற மாயைகளின் பொழிலை அழிக்கவல்லது . மாயைகள் அழியும்போது இறைஞானம் என்ற கடம்பவாசனை அடியவர்களான வள்ளிக்குரத்திகளின் சுயம் என்ற மனத்தை அழிக்கும் இவையெல்லாம் சம்பவிக்கும்போது என்ன நடக்குமாம் ?

மாமயிலோன்
      
வேல்பட் டழிந்தது வேலையுஞ் சூரனும் வெற்புமவன்
         
கால்பட் டழிந்ததிங் கென்றலை மேலயன் கையெழுத்தே

ஞானம் சூரன் என்ற அசுரனையும் அவன் மாயைகளை மட்டுமா அழிக்கும் ; நம் தலையெழுத்தையும் மாற்றி செயல் மாண்டு அடங்க சுமாயிருக்க கற்றுக்கொடுத்துவிடும்

பக்தியோகம் கைகூடினால் ஒழிய குண்டலினியை ஏற்றி இறக்குவதால் வந்துவிடாது

பக்திதிரு முகங்களான ஆறு மார்க்கங்களையும் பன்னிரு தோழ்களுமான அமுதத்தை சமரச வேதத்தை சமரச சண்மார்க்கத்தை கண்டுணர்ந்து சரணாகதி அடையவேண்டும்

இந்த ஆறு மார்க்கங்களின் அதிதேவர்களோ இறைதூதர்களோ தங்களை ஒருபோதும் கடவுள் என்று சொல்லிக்கொள்வதில்லை . கடவுளை அடையும் பாதை என்றுதான் சொல்லிக்கொண்டார்கள் ; ஆகவேதான் அவர்களை பக்திதிருமுகங்கள் என்கிறார் அருணகிரியார் 

அப்போது தானாகவே மனிதனின் உச்சியிலுள்ள கமலமான சகஸ்ரத்தில் குண்டலினியும் இறைஅருளும் உருகி பொங்கி வழிந்து உலகம் முழுமையும் பேரானந்த சகாரத்தை உண்டாக்குமாம்

புத்திக் கமலத் துருகிப் பெருகிப் புவனமெற்றித்
         
தத்திக் கரைபுர ளும்பர மாநந்த சாகரத்தே

கடவுளின் பரமானந்த சாகரம் என்ற அன்பை பக்தியோகத்தால் மட்டுமே நாம் ருசி பார்த்து உலகம் முழுவதிலும் அதை நிரப்ப முடியும்

நாராயணனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணனாய

ஆதிசேஷனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ ஆதிசேஷாய

நாராயணியாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணியாய

சிவனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ சிவாய

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி






  







No comments:

Post a Comment