Total Pageviews

Sunday, February 7, 2016

கந்தர் அலங்காரம் 62 , 70 , 72





ஆலுக் கணிகலம் வெண்டலை மாலை யகிலமுண்ட
மாலுக் கணிகலந் தண்ணந் துழாய்மயி லேறுமையன்
காலுக் கணிகலம் வானோர் முடியுங் கடம்புங்கையில்
வேலுக் கணிகலம் வேலையுஞ் சூரனும் மேருவுமே. ... 62

விழிக்குத் துணைதிரு மென்மலர்ப் பாதங்கள் மெய்ம்மைகுன்றா
மொழிக்குத் துணைமுரு காவெனு நாமங்கள் முன்புசெய்த
பழிக்குத் துணையவன் பன்னிரு தோளும் பயந்ததனி
வழிக்குத் துணைவடி வேலுஞ்செங் கோடன் மயூரமுமே. ... 70

சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல்
வேந்தனைச் செந்தமிழ் நூல்விரித் தோனை விளங்குவள்ளி
காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனைச்
சாந்துணைப் போது மறவா தவர்க்கொரு தாழ்வில்லையே. ... 72


ஆல மரம் விழுதுகள் விட்டு விழுதுகள் விட்டு அடர்ந்து பரவிக்கொண்டே இருப்பது . வானத்திலிருந்து பூமியை நோக்கி விழுதுகள் வளருகின்றன ஒரே மரத்தின் தொடர்பில் பல தனித்த மரங்கள் போல விருட்சம் விட்டு வளர்பவை

மனித ஆத்மாக்கள் மண்ணிலிருந்து உண்டாபவை அல்ல . ஆத்மாக்கள் வானத்தில் உள்ள பரமாத்மாவிலிருந்து தனித்த பிரகிருதி அடைந்த ஜீவாத்மாக்கள் . ஆனால் அவை கரைதிரைகளை போக்கி பரிசுத்தம் அடைந்து ஒளி சரீரம் பெற்று தேவராக பரலோகம் நுழைய பூமியில் மனித பிறவி எடுத்தாக வேண்டும் . ஸ்துல சரீரத்தில் மனிதனாக இருந்து கர்மவிணையை தொடர்ந்தாலொழிய பரிசுத்தம் அடைய முடியாது மனித பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே என்கிறது தேவார பாடல் அரிது அரிது மானிடராய்ப்பிறப்பது அரிது

அப்படி பூமியில் மனிதனாக பிறப்பெடுக்கும் அனைவரும் முதல் மனிதன் சிவனின் வாரீசுகளே . அவரைப்போலவே வைரவனாக ஒளி சரீரம் அடைந்து பரலோகில் நுழைவதே மனித பிறவியின் இலக்கு சிவன் என்ற ஆலமரத்தில் உள்ள விருட்சங்களாகவே ஒவ்வொரு மனித ஆத்மாவும் பூமியில் விழுது விட்டு வாழ்ந்துகொண்டுள்ளன

ஆகவேதான் சிவனை ஆலமரம் என்கிறது வேதம் . அவருக்கு அணிகலம் அவரது கங்கையை அணிந்த சடாமுடி

மாதா கங்கையே பாவங்கள் அனைத்தையும் போக்கும் வல்லமை உள்ளவள் . கடவுளின் பேரருளில் வளரும்போது அன்னை நாராயணியின் அருள் நமக்கு கிட்டும் . அவர் நம்மை சீடனாக மகனாக ஏற்றுக்கொள்ளும்போது மட்டுமே ஆத்மா தூய்மை உறுதிபடுத்தப்படும்

ஒரு மனிதன் உலகாதாய வாழ்வில் பவபுண்ணியத்தில் உழன்று தவித்து கடவுளை நோக்கி திரும்பும்போது அவன் ஆன்ம வாழ்வில் புதிய பிறவி எடுக்கிறான் மனம் திரும்புதல் மறுபடி பிறத்தல் என்கிறார் யுகபுருஷன் இயேசு

இறைவனை மிக நெருங்கிய ஆத்மாக்களே பிறக்கும்போதே கருவிலே திருவுடையவராக இறைநாட்டத்தோடேயே பிறக்கிறார்கள் . ஓரளவு ஆன்மவாழ்வில் சாதனை செய்திருந்தாலும் ஒவ்வொரு முறை பிறக்கும்போதும் முதலாவது பூமிக்குரிய வாழ்வில் உழன்று விட்ட இடத்திற்கு வந்து சேரவே பல பத்தாண்டுகள் ஆகி விடுகிறது எனக்கும் கூட முந்தய பிறவியின் ஆன்ம வெளிச்சத்தை கண்டறிந்து தொடர ஐம்பது ஆண்டுகள் ஆகிவிட்டிருக்கிறது . இதில் இப்போது பிறந்துள்ள குலத்தின் குடும்ப பாவத்தின் பரிகாரத்திற்காகவும் இத்தனை ஆண்டுகள் பாடுபட்ட பிறகே இப்பிறவியின் ஆன்ம வாழ்வின் பயனை தொடரும்காலம் வந்துள்ளது இன்னும் காந்தியின் ஆசிரமத்தில் வாழ்வை அர்ப்பணித்த பல நல்ல ஆத்மாக்கள் இப்போது பிறந்துள்ள குடும்ப குல பாவங்களை தீர்க்கவே பெரும்பாடு பட்டுக்கொண்டிருப்பதை காணமுடிகிறது . குலமும் குலதெய்வங்களும் கோத்திர ரிஷிகளும் நம்மை பரலோக ராஜ்ஜியத்தின் தொடர்பில் இறைவன் பிரநிதிகளாக இருந்து பரமாரித்து வளர்ப்பதில் பெரும்பங்கு வளர்க்கிறார்கள் . ஆகவே நாம் வளர்வதோடு கோத்திரம் குலம் என்ற ஆலமரமும் வளர அதன் பாவங்களை தீர்ப்பதிலும் நாம் பாடுபட்டே ஆகவேண்டும்

அது பாவங்களை பரிகரிக்கும் அதிதேவர் நாராயணியை கங்காமாதாவாக நாம் உணர்ந்து அவரின் அருளில் தொடர்பில் வளரவேண்டும் சிவனின் பணிமுடி அவருக்கு அணிகலம் ஆலுக்கு அணிகலம் வெண் தலை மாலை நாம் உய்வடையும் ரகசியம் இதில் உள்ளது 


அபிராமி அந்தாதி 72:

எங்குறை தீரநின்று ஏற்றுகின்றேன், இனி யான் பிறக்கில்,
நின் குறையே அன்றி யார் குறை காண்?-இரு நீள் விசும்பின்
மின் குறை காட்டி மெலிகின்ற நேர் இடை மெல்லியலாய்.-
தன் குறை தீர, எம்கோன் சடை மேல் வைத்த தாமரையே.

சிவன் மனிதனாக வந்த தோஷத்தை போக்கிக்கொள்ள என்ன செய்துள்ளாராம் கங்கையை தன் ஜடாமுடியில் வைத்துக்கொண்டாராம் 

கர்ப்பத்தில் பிறப்பது பிறப்பு என்றால் நாம் உள்ளத்தால் உணர்ந்து இறைவனோடு ஒப்புறவாகும் வாழ்வுக்குள் அடி எடுத்து வைத்ததும் அது மறுபடி பிறத்தல் என்றாகிறது



யோவான் 3 :

3. இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.

4. அதற்கு நிக்கொதேமு: ஒரு மனுஷன் முதிர்வயதாயிருக்கையில் எப்படிப் பிறப்பான்? அவன் தன் தாயின் கர்ப்பத்தில் இரண்டாந்தரம் பிரவேசித்துப் பிறக்கக்கூடுமோ என்றான்.

5. இயேசு பிரதியுத்தரமாக: ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்.

6. மாம்சத்தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும், ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும்.


இந்து தர்மத்தில் குரு தீட்சை என்பது மறுபடி பிறத்தலாகும் . நல்ல குருவோ அரைகுறை குருவோ அல்லது கெட்ட குருவோ இறைவனின் பிரதிநிதியாக அவரை கருதிக்கொண்டு இறைவனிடம் புதிய வாழ்வை தொடர நாம் செய்யும் சங்கல்பமே குரு தீட்சை ஆகும் . இதில் நான் ஒரு முக்கியமான விசயம் இறைவனிடம் தீட்சை பெறுவதாக நினைத்து மனித குரு நல்லவரோ கேட்டவரோ பெறவேண்டும் . அப்போது நமது குரு கெட்டவராகவோ அல்லது போதுமானவர் அற்றவராக இருந்தாலும் இறைவன் அவரிடமிருந்து நம்மை அடுத்தடுத்த குருமார்களிடம் கொண்டு சேர்ப்பார் . குருமார்களை கடரும் அனுபவம் உள்ளவர்கள் முருகனின் குருகுலத்தில் உள்ளவர்கள் என்று அர்த்தம் . இல்லாவிட்டால் ஒரே ஒரு குருவிற்கு செம்படித்துக்கொண்டு வளராதவர்களாக பலர் இருக்கிறார்கள்

குருவுக்கெல்லாம் குரு இறைவனும் அவரது அதிதேவர்கள் நால்வருமே . ஆவிமண்டல குருநாதர்கள் பலர் அவர்களின் குருகுலத்தில் உள்ளனர் . அந்த குருகுலங்களில் நமது குருகுலம் எதுவென்று கண்டறிந்து மற்ற குருகுலங்கலோடும் நல்லுறவு பேண வேண்டுவது நமது கடமை . அப்படி எந்த குருகுலத்தில் நாம் இருந்தாலும் ஞானம் வழங்குவது அதிதேவர் ஆதிசேஷனே , அவரே சற்குரு முருகன் 


பூமியில் முன்னோடிகளான உபகுருநாதர்கள் பலரை நாம் கடரவேண்டியது அவசியம் . ஒரே குருவோடு பெருமை பேசிக்கொண்டிருந்தால் நாம் முன்னேறப்போவதில்லை , எங்கிருந்தேனும் பல குருநாதர்கள் மூலமாக ஞானம் கடந்து வருமோ அதை ஏற்கும் பக்குவம் மட்டும் நமக்கு இருந்தால் போதும் அந்த ஞானத்தை அளிப்பவர்கள் அனைவரும் முருகனின் பிரதிநிதிகளே

கடவுளை அடையும் நோக்கத்தை இலக்காக வைத்து குருமார்கள் அனைவரையும் பாலமாக மட்டுமே கருதிக்கொண்டால் கடவுள் தகுதியான குருமார்கள் பலரை நமக்கு சூழ்நிலைக்கு ஏற்ப மாறிமாறி அனுப்பிக்கொண்டே இருப்பார்

ஆனால் நாமோ கடவுளை விட்டுவிட்டு நாம் பிடித்த குருவை கடவுளாக்கிக்கொள்கிறோம் . நமது இதயத்தில் தேவ அன்பில்லை கடவுள் வெறுப்பு குடிகொண்டுள்ளது . கடவுளின் பேரால் கடவுளுக்கு பதிலாக வேறு யாரையாவது கடவுளாக்கிகொள்வது நமது வாடிக்கை ஆகிவிடுகிறது 


உலகம் என்பது அவ்வளவு எளிதாக நம்மை விடாது அது எப்படியாவது கடவுளின் பேராலும் கடவுளை விட வேறொன்றை கடவுளாக நாம் வைத்துக்கொள்ள வழிகாட்டும்

ஆகவேதான் வேதங்களின் அதிபதியான அதிதேவர் நாராயணன் உலகத்தை உண்டார் . அவர் தூய்மைப்படுத்தும் துளசியை மாலையாக அணிந்துகொண்டார் . துளசியும் கங்கையும் இணைந்த துளசித்தீர்த்தம் நாம் உட்கொள்வது சரீரத்தையும் ஆத்மாவையும் இறைவனின் பால் ஊக்கி விடும் .

ஞானத்தை அளிக்கும் முருகனின் காலை சரணடைந்து இருந்தால் மட்டுமே தேவர்கள் தேவர்களாகவும் பக்திமணம் உள்ளவர்களாகவும் இருக்கமுடியும் அவரின் ஞானம் மட்டுமே அசுர இயல்பை அழித்து சுயம் அற்றவர்களாக நம்மை மாற்றும் அப்போது நமக்கும் கங்காமாதாவின் அருளும் கிட்டும்

நம் விழிக்கு அவனின் பாதங்களை ஆவிமண்டல குருநாதர்களை பூமியின் உபகுருநாதர்களை அணிகலனாக கொள்ளவேண்டும் .அப்போது நமது பாவங்களை போக்க ஆறு மார்க்கங்களும் வழிகாட்டும் வேலுமயிலும் துணை நிற்கும் . வேல் மாயைகளை உடைக்கும் . செங்கோடன் மயூரம் என்பது ஞானகாரனான அதிதேவர் ஆதிசேஷனின் ரத்தினமான ஞானமாகும்

ஆதிசேஷனின் இரண்டு வியாபகங்கள் செங்கோடன் கார்க்கோடன் . திருச்செங்கொட்டு மலை தெய்வத்திருமலை என கந்தரலங்காரம் வர்ணிக்கிறது . மலை அடிவாரத்தில் கார்க்கோடன் என்ற கணபதியும் மலை உச்சியில் செங்கோடன் என்ற முருகனும் அருள்பாளிப்பார்கள் ரத்தினங்களாக பதிக்கப்பட்டு முருகனின் வேல் மின்னுவதை பார்க்கலாம்

சேந்தன் ஏற்றம் இறைப்பதை சேந்தி விடுவது என்பார்கள் . அதுபோல நம்மை சேந்தி சேந்தி உயர்த்தி விடுவதால் முருகன் சேந்தன் .கந்தன் வட்டி என்பது அசல் அப்படியே இருக்க வட்டி மட்டும் வசூலித்துக்கொண்டே இருப்பது . ஆனால் கந்துவட்டி என்பதில வட்டியும் அசலும் சேர்ந்தே கழிந்து ஒழுங்காக கட்டி வந்தால் ஒரு குறிப்பிட்ட காலத்தில் கடன் கழிந்து விடும் . அதிதேவர்கள் நால்வரின் மூலமாக கடவுளை வழிபடுவதை வழக்கமாக்கொள்ளும்போது சற்குருநாதர்களான ஆவிமண்டல குருநாதர்களும் அவர்களின் ஆழுகையிலுள்ள மனித குருநாதர்களும் நமது பிறவி பாவங்கள் நீங்கி அருளில் வளர பிறவிப்பெருங்கடலை கடர உதவிசெய்வார்கள் . அகவே முருகன் கந்தன் மாயைகளை அழித்து ஞானம் வழங்குவதால் செங்கோட்டு வெற்பன் அவனை சிறு நாழிகை நினைப்பவர்கள் கூட தாழ்மை அடையமாட்டார்கள் . அப்படிப்பட்ட வள்ளிகலான பக்தர்களை தேடிப்பிடித்து இழுத்துக்கொள்பவன் முருகன் . அவனது குருகுலம் நாம் ஒதுங்கினாலும் விடாது . எப்பிறவியிலாவது நம்மை பிடித்து இறைவனிடம் கொண்டு சேர்க்கும்


நாராயணனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணனாய

ஆதிசேஷனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ ஆதிசேஷாய

நாராயணியாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணியாய

சிவனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ சிவாய

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி


No comments:

Post a Comment